இரத்த நாளங்களை இளமையாக வைத்திருக்க உதவும் தானியங்கள்- சுவிஸ் ஆய்வு
29 வைகாசி 2025 வியாழன் 17:05 | பார்வைகள் : 6650
சில வகை உணவுப்பொருட்கள், இரத்த நாளங்களை இளமையாக வைத்திருக்க உதவுவதாக சுவிஸ் ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
பொதுவாக, முழு தானியங்கள் இரத்த நாளங்களை இளமையாக வைத்திருக்க உதவுவதாக சூரிக் பல்கலை ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
அதாவது, ஃபைபர் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களும், anti-inflammatory குணங்களும் கொண்ட முழு தானியங்கள், உடலின் இரத்தக்குழாய்களை இளமையாக வைத்திருக்க உதவுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
அதே நேரத்தில், இறைச்சி, பால் பொருட்கள் மற்றும் செயற்கை இனிப்பு பயன்படுத்தப்படும் பானங்களை குறைத்துக்கொள்வது நல்லது என்கிறது அந்த ஆய்வு.
காரணம், இந்த உணவுப்பொருட்களில் பினைல் அலனைன் என்னும் ஒரு அமினோ அமிலம் உள்ளது.
குடலுக்குள் காணப்படும் கிளாஸ்ட்ரிடியம் என்னும் ஒருவகை நுண்ணுயிரி, இந்த பினைல் அலனைன் என்னும் அமினோ அமிலத்தை பினைல் அசிட்டிக் அமிலமாக மாற்றுகிறது.
இந்த பினைல் அசிட்டிக் அமிலம், இரத்த நாளங்களின் உள் பக்கம் அமைந்துள்ள செல்களை முதுமையடையச் செய்வதை ஆய்வகப் பரிசோதனையில் கண்டுபிடித்துள்ளார்கள் ஆய்வாளர்கள்.
ஆக, இறைச்சி, பால் பொருட்கள் மற்றும் செயற்கை இனிப்பு பயன்படுத்தப்படும் பானங்கள் இரத்த நாளங்களின் உள் பக்கம் அமைந்துள்ள செல்களை முதுமையடையச் செய்கின்றன.
அதே நேரத்தில், short-chain fatty acids என்னும் உட்பொருட்களைக் கொண்டுள்ள, ஃபைபர் நிறைந்த உணவான முழு தானியங்கள், இரத்த நாளங்களை இளமையாக வைத்திருக்க உதவுவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
25 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan