Paristamil Navigation Paristamil advert login

ஒரே நாளில் இரண்டு தங்க சுரங்கங்களில் கொள்ளை!ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு நடவடிக்கை!!

ஒரே நாளில் இரண்டு தங்க சுரங்கங்களில் கொள்ளை!ஹெலிகாப்டர்கள் மூலம்   மீட்பு நடவடிக்கை!!

29 வைகாசி 2025 வியாழன் 17:02 | பார்வைகள் : 3539


கயானாவின் (Guyane) மேற்குப் பகுதியில் உள்ள இரண்டு சட்டபூர்வ தங்க சுரங்கங்கள் ஆயுதம் தாங்கிய கொள்ளையர்களால் புதன்கிழமையன்று கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 

ஊழியர்கள் தற்காலிகமாக பிடித்துவைக்கப்பட்டனர், ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவ இடம் சாலை வசதி இல்லாத தனிமைப்பட்ட பகுதியாக இருப்பதால், தகவல்கள் முழுமையாக கிடைக்கவில்லை. GIGN விசேட படை ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டு, இரு சுரங்கங்களும் பாதுகாப்பாக கைப்பற்றப்பட்டன. குற்றவாளிகள் தற்போது தப்பி ஓடியுள்ளனர்.

இந்த ஆண்டு இது 5வது சுரங்க கொள்ளை சம்பவமாகும், அதில் மூன்று கடந்த ஏப்ரல் மாதம் முதல் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டுகளில் இத்தகைய கொள்ளைகள் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது. 

2020-ல் 13 கொள்ளைகளும்  2024-ல்  3 சம்பவங்களும் Saint-Laurent-du-Maroni அருகே நடைபெற்றுள்ளன. கயானாவில் பிரான்ஸின் பெரும்பாலான தங்க சுரங்கங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்