Drancy : பேருந்தில் மோதுண்டு பெண் ஒருவர் பலி!!
13 தை 2026 செவ்வாய் 14:49 | பார்வைகள் : 3241
93 ஆம் மாவட்டத்தில் தமிழர்கள் செறிந்துவாழும் Drancy நகரில் இடம்பெற்ற விபத்தொன்றில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
ஜனவரி 11, ஞாயிற்றுக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Square de la Libération பகுதிக்கு அருகே உள்ள பாதசாரிகள் கடவையில் வீதியைக் கடக்க முற்பட்ட பெண் ஒருவரை RATP பேருந்து ஒன்று மோதித்தள்ளியுள்ளது.
இதில் பேருந்துக்குள் சிக்குண்டு படுகாயமடைந்த அப்பெண், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.
பாதசாரிகளுக்காக சமிக்ஞ்சை விளக்கு சிவப்பு நிறத்தில் ஒளிரும் போது அவர் வீதியை கடந்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan