ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினத்தை சந்திக்கும் மக்ரோன்!!
29 வைகாசி 2025 வியாழன் 17:35 | பார்வைகள் : 4710
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தம்பதிகள் தென் கிழக்கு ஆசியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இன்று மே 29, சற்று முன்னர் அவர்கள் சிங்கப்பூரைச் சென்றடைந்துள்ளனர்.
நாளை வெள்ளிக்கிழமை அவர்கள் இருவரும் சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினத்தைச் சந்திக்க உள்ளனர். பிரான்ஸ்-சிங்கப்பூர் நாடுகளுக்கிடையே நிலவும் 60 ஆண்டுகால நட்பை கொண்டாடும் முகமாக இந்த பயணம் அமைந்துள்ளது. ஜனாதிபதியை சந்திப்பதுடன் பிரதமர் Lawrence Wong இனையும் சந்தித்து உரையாடுகின்றனர்.
மக்ரோன் தம்பதிகள் ஆறு நாட்கள் சுற்றுப்பயணமாக கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். முன்னதாக அவர்கள் இருநாட்கள் வியட்நாமுக்கும், இந்தோனேசியாவுக்கும் விஜயம் மேற்கொண்டு அங்கிருந்து சிங்கப்பூருக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan