யூத விரோதக் கருத்துகளை பேசிய பரிஸ் நகர எக்கோலொஜிஸ்ட் உறுப்பினர் பதவி விலகினார்!!
29 வைகாசி 2025 வியாழன் 14:57 | பார்வைகள் : 2772
பரிஸ் நகரின் 20வது வட்டாரத்தில், எக்கோலொஜிஸ்ட் கட்சியைச் சேர்ந்த லிலா ஜெலாலி (Lila Djellali) காசா நிலவரம் குறித்து நகராட்சி கூட்டத்தில் பேசிய போது, முன்னால் ஜனாதிபதி சார்ள் து கோல் கூறியதாக ஒரு தவறான மேற்கோளை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
அதில், யூதர்கள் ஒன்றுகூடினால் அவர்கள் ஆபத்தானவர்களாக மாறலாம் சார்ள் து கோல் கூறியதாகவும், "அவர்கள் இழைக்கக்கூடியது கற்பனை கடந்தது" எனச் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், சார்ள் து கோல் 1967ஆம் ஆண்டு சொன்னது இதற்கு முற்றிலும் மாறானது. அவர் யூதர்களைப் பற்றி "தன்னம்பிக்கையுள்ள மற்றும் ஆதிக்கம் செலுத்தும் மக்கள்" என கூறியதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த தவறான மேற்கோள் மற்றும் யூத விரோதத்துக்கான குற்றச்சாட்டுகள் கண்டிக்கப்பட்டன. பரிஸ் 20வது வட்டாரத்தை சேர்நத மேயர் மற்றும் எகோலொஜிஸ்ட் கட்சி இவரது கருத்துகளை கண்டித்துள்ளனர். அதன் பின்னர், லிலா ஜெலாலி மன்னிப்பு கேட்டுள்ளார், மேலும் யூத விரோத கருத்துக்களை மீண்டும் ஒட்டுமொத்தமாக தவிர்க்க கல்வி பெறுவதாகவும், தற்காலிகமாக தன்னுடைய பொறுப்புகளில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
25 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan