ரஷ்யாவின் முக்கிய ஆயுத உற்பத்தி மையங்களை தாக்கிய உக்ரைன்
29 வைகாசி 2025 வியாழன் 15:34 | பார்வைகள் : 3564
உக்ரைன் படைகள், ரஷ்யாவின் முக்கிய ஆயுத உற்பத்தி மையங்களை ட்ரோன்கள் மூலம் தாக்கியதாக அறிவித்துள்ளது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், இந்த தாக்குதலுக்கு எதிராக தங்கள் வான்வழி பாதுகாப்பு படைகள் 296 உகரைன் ட்ரோன்களை 13 மாகாணங்களில் வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது.
மாஸ்கோவிற்கு அருகில் உள்ள டுப்னா நகரத்தில் இயங்கும் கிரான்ஸ்டாட் ட்ரோன் உற்பத்தி மையம், மற்றும் கிரூஸ் ஏவுகணைகள் தயாரிக்கும் ரடுகா தொழிற்சாலை, இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டதாக உகரைன் தெரிவித்துள்ளது.
மேலும், மாஸ்கோ பகுதியிலுள்ள ஏங்க்ஸ்டிரெம் மைக்ரோசிப் தொழிற்சாலையும் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலை, ரஷ்ய ராணுவ தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் முக்கிய கூறுகளை உருவாக்குகிறது.
இவானோவோ பகுதியில் உள்ள கெமிக்கல் மற்றும் வெடிகுண்டு சேர்க்கை தொழிற்சாலையும் ஒரு நாளுக்கு முன்னர் வெற்றிகரமாக தாக்கியதாக உகரைன் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல்களில் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக உகரைன் பாதுகாப்பு அமைப்பு (SBU) உறுதிபடுத்தியுள்ளது. உகரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகள் இல்லை என்பதால், இயந்திரமயமான ட்ரோன் தாக்குதல்தான் முக்கிய ஆயுதமாக பயன்படுகிறது.
இதேவேளை, ரஷ்யாவும் 900-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை உகரைன் மீது கடந்த மூன்று நாட்களில் ஏவியதாக உகரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan