சாலை பாதுகாப்பு- சாரதி அனுமதிக்கான மருத்துவ பரிசோதனை சாத்தியமா?
29 வைகாசி 2025 வியாழன் 15:00 | பார்வைகள் : 3534
வாகன சாரதி அனுமதியைப் பெறுவதற்கோ அல்லது புதுப்பிப்பதற்கோ முன், மருத்துவ பரிசோதனையைக் கட்டாயமாக்க சேர்க்க வேண்டுமஎன Horizons கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் Frédéric Valletoux முன்வைக்கும் புதிய சட்ட முன்மொழிவின் நோக்கமாக உள்ளது.
சாலை பாதுகாப்புக்கான ஒரு புது முயற்சி!
Horizons கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் Frédéric Valletoux சாரதிகளுக்கான 'மருத்துவ பரிசோதனை' கட்டாயமாக்கும் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கின்றார். இது ஒரு முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கையாக கருதப்படுகிறது.
அவரது தனது பாராளுமன்ற உரையில், சாலை பாதுகாப்பு பிரான்சில் மிக முக்கியமான விடயமாக இருப்பதை வலியுறுத்துகிறார்.
'சாலை விபத்துகள் பல உயிரிழப்புகளையும், கடுமையான காயங்களையும், மனித வேதனைகளையும் ஏற்படுத்துகின்றன.'
எனும் அவர் மேலும்,
'சாரதிகளின் உடல்நல நிலை, சாலை பாதுகாப்பில் முக்கியமான பங்கு வகிக்கிறது. அதன் மூலமாக விபத்துகளை குறைக்கும் வாய்ப்பு உள்ளது.'
கண்பார்வை குறைபாடு, செவி கேள்திறன், நினைவாற்றல் குறைபாடு அல்லது நீடித்த நோய்கள் போன்ற உடல்நல பிரச்சனைகள், வாகனம் செலுத்தும் திறனை பாதிக்கக்கூடியவை என்பதால், இது போன்ற சோதனைகள் அவசியம்' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வயதினருக்கும் மருத்துவ பரிசோதனை?
பாராளுமன்ற உளுப்பினர் சாரதிகளின் வயது எதுவாக இருந்தாலும், மருத்துவ பரிசோதனை கட்டாயமாக இருக்க வேண்டும் என்ற பிரேரணையை முன் வைத்து உள்ளார். இந்த பரிசோதனை, புதிய அனுமதியைப் பெறவும், பழையதை புதுப்பிக்கவும் ஒரு நிபந்தனையாக இருக்க வேண்டும் என இவர் தனது பிரேரணையில் தெரவித்துள்ளார.
அந்த பிரேரணையின் படி:
70 வயதுக்கு மேற்பட்ட ஓட்டுநர்களுக்காக ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் ஒரு முறையாக,
மற்ற அனைவருக்காக ஒவ்வொரு 15 ஆண்டுகளுக்கும் ஒரு முறையாக,
இந்த மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
இந்த பரிசோதனை பொது மருத்துவர்களாலும் அல்லது நிபுணர்களாலும் மேற்கொள்ளப்படலாம் மற்றும் மருத்துவர்களிற்கான தரம் அரசாணை வழியாகத் தீர்மானிக்கப்படும்.
இந்த பரிசோதனையின் முடிவுகள் சாரதிக்கு எதிராக வந்தால், அந்த நபர் தனது நிலையை மீண்டும் பரிசீலிக்க வேண்டுமென்று மறுஆய்வு கோரலாம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
25 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan