Paristamil Navigation Paristamil advert login

செயல்திறன் மேம்பாட்டு துறையில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவிப்பு

செயல்திறன் மேம்பாட்டு துறையில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவிப்பு

29 வைகாசி 2025 வியாழன் 09:55 | பார்வைகள் : 2610


அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அரசின் செயல்திறன் மேம்பாட்டு துறையில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் , எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து எலான் மஸ்க் கூறியதாவது, செயல்திறன் மேம்பாட்டுக்காக உருவான துறையின் முக்கிய நோக்கம் காலத்தோடு வலுவடையுமென்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றார்.

இதற்கு முன், டிரம்பின் புதிய வரி மசோதாவுக்கு எதிராக மஸ்க் கருத்து தெரிவித்திருந்தார். இதில் ஏமாற்றப்பட்டேன் எனக் கூறிய மஸ்க், அதற்குப் பிறகு அரசுப் பணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

புதிய வரி திட்டத்தில் உள்ள சில அம்சங்கள் அவருக்கு விருப்பமில்லாமல் இருப்பதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இனி, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களில் மஸ்க் முழுமையாக கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை கடந்த ஆண்டு நவம்பரில், டிரம்ப், செயல்திறன் மேம்பாட்டுக்கான DOGE துறைக்கு மஸ்கை நியமித்தமை குறிப்பிடத்தக்கது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்