2027 இல் மருத்துவக் காப்பீட்டுக் கட்டணம் வழங்காமல் போகுமா? - மக்ரோன் அரசின் தோல்வி!

27 வைகாசி 2025 செவ்வாய் 18:14 | பார்வைகள் : 2047
சமூகக் பாதுகாப்பப்பின் (securite sociale) மருத்துவக் காப்பீடு ளநஉரசவைந ளழஉயைடந 'கட்டுப்பாட்டை மீறியுள்ளது என்று மதிப்பிடும் சாஜெஸ், 2027 முதல் 'பணப்புழக்க நெருக்கடியால் அதிகரித்து வரும் கடுமையான ஆபத்தாக இருப்பதாக நிபுணர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
தணிக்கையாளர் நீதிமன்றம் (La Cour des comptes) மீண்டும் எச்சரிக்கை மணி அடித்துள்ளது. மே 26 திங்கட்கிழமை வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், சமூகப் பாதுகாப்புக் கணக்குகளின், குறிப்பாக சுகாதாரக் கிளையின் 'கட்டுப்பாட்டை மீறிய' பாதிப்பை Sages கண்டனம் செய்துள்ளது.
மருத்துவக் காப்புறுதி செலுத்தத் தவறுதல்' மூலம் 'பணப்புழக்க நெருக்கடியின் தீவிர அபாயத்திற்கு வழிவகுக்கும்' ஒரு சூழ்நிலை உருவாகும் இது '2027 ஆம் ஆண்டிலேயே நிகழக்கூடும்' என்று நீதிமன்றம் எச்சரிக்கின்றது.
2
025 ஆம் ஆண்டில் 22.1 பில்லியன் பற்றாக்குறை எதிர்பார்க்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டில் சமூகப் பாதுகாப்புப் பற்றாக்குறை 15.3 பில்லியன் யூரோக்களாக அதிகரித்துள்ளதாகவும், அதாவது ஆரம்ப கணிப்பை விட 4.8 பில்லியன் யூரோக்கள் அதிகரித்து இருப்பதாகவும், 2025 ஆம் ஆண்டிற்கான முன்னறிவிப்பு மேலும் 22.1 பில்லியன் யூரோக்களாக அதிகரிக்கும் என்றும் தணிக்கையாளர் நீதிமன்றம் (La Cour des comptes) சுட்டிக்காட்டுகிறது.
2024 பற்றாக்குறையின் பெரும்பகுதி (90சதவீதம்) சுகாதாரப் பிரிவிலிருந்து வருகிறது என்று நீதிமன்றம் நினைவு கூர்ந்தது, சமூகப் பாதுகாப்பு நிதித் திட்டமடலில் நிர்ணயிக்கப்பட்ட நோக்கங்களுடன் ஒப்பிடும்போது செலவினங்களில் 'தொடர்ச்சியான வீழ்ச்சிகள்' இருப்பதைக் குறிப்பிட்டுள்ளது.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் எங்கள் பொது நிதி மீதான கட்டுப்பாட்டை இழந்துவிட்டோம். கடன் சமூக மாதிரியை பலவீனப்படுத்துகிறது. இந்தப் பிரச்சினைகளை இரண்டாம் நிலைப் பிரச்சினைகள் போல நடத்துவதை நாம் நிறுத்த வேண்டும் என்றும் நிர்ணர்கள் பெரும் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
எமது ஊதியத்தில் தொடர்ச்சியாக மருத்துவக் காப்பீட்டிற்காகப் பெருந்தொகைப பணம் அரசால் அறவிடப்பட்டு விட்டு அதற்கான சேவைகளை வழங்காது நடுத்தெருவில் விடுவது அரசின் பெரும் திருட்டு ஆகும்.