இலங்கையில் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

27 வைகாசி 2025 செவ்வாய் 12:47 | பார்வைகள் : 477
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையானது இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணி முதல் நாளை புதன்கிழமை (28) காலை 10.00 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
காலி மாவட்டம் – எல்பிட்டிய பிரதேச செயலக பிரிவு
களுத்துறை மாவட்டம் – பாலின்தநுவர பிரதேச செயலக பிரிவு
கண்டி மாவட்டம் – மேல் கோரளை, பஸ்பாகே கோரளை ஆகிய பிரதேச செயலக பிரிவுகள்
கேகாலை மாவட்டம் – அரநாயக்க, புலத்கொஹுபிட்டிய , யட்டியந்தோட்டை, ருவன்வெல்ல ஆகிய பிரதேச செயலக பிரிவுகள் ஆகியவற்றுக்கு இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.