மதுரையில் முருக பக்தர் மாநாடு: யோகி, பவன் கல்யாண் பங்கேற்பு

26 வைகாசி 2025 திங்கள் 12:14 | பார்வைகள் : 1033
மதுரையில், 'குன்றம் காக்க... கோவிலை காக்க' என்ற பெயரில் முருக பக்தர்கள் மாநாடு, மதுரையில், ஜூன் 22ல் ஹிந்து முன்னணி சார்பில் நடைபெற உள்ளது.
ஒன்றரை மாதமாக, தமிழகம் முழுதும் மக்களை சந்தித்து, மாநாட்டில் பங்கேற்க ஹிந்து முன்னணியினர் அழைப்பு விடுத்து வருகின்றனர். ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோரை பங்கேற்கச் செய்ய முனைப்பு காட்டப்பட்டு வருகிறது.
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது:
அரசியல் அல்லாத ஆன்மிக மாநாடாக இது நடைபெறும். மாநாட்டு பணி மும்முரமாக நடக்கிறது. இதுவரை, 750 வேல் வழிபாடுகள் நடத்தி மாநாடு குறித்து தெரியப்படுத்தி உள்ளோம்.
மாநாட்டில், அறுபடை வீடு தொடர்பான கண்காட்சி இடம்பெற உள்ளது. முன்னாள் முதல்வர் பழனிசாமி, த.மா.கா., தலைவர் வாசன், நடிகர் ரஜினி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மடாதிபதிகள் மற்றும் தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - காங்., உள்ளிட்ட அனைத்து கட்சிகளைச் சேர்ந்த எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.