கோழிக்கோட்டில் அதிகபட்சமாக 200 மி.மீ., மழைப்பொழிவு!

26 வைகாசி 2025 திங்கள் 11:14 | பார்வைகள் : 335
கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள உருவி பகுதியில் நேற்று 200 மி.மீ., மழை கொட்டித் தீர்த்துள்ளது.
கேரளாவில் வழக்கமாக, ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்கும். ஆனால் இம்முறை, ஒரு வாரத்துக்கு முன்பாகவே, நேற்று முன்தினம் பருவமழை துவங்கியது. கடந்த 24 மணி நேரத்தில், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள உருவி பகுதியில் நேற்று 200 மி.மீ., மழை கொட்டித் தீர்த்துள்ளது.
கண்ணூர், இடுக்கி, காசர்கோடு, திருச்சூர், கோழிக்கோடு, வயநாடு, எர்ணாகுளம், பத்னம்திட்டாவில் இன்று கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இடுக்கி, வெள்ளத்தூவல்- 160 மி.மீ.,
கண்ணூர், அய்யக்குன்னுவில்- 250 மி.மீ.,
கண்ணூர், செம்பேரி- 130 மி.மீ
திருச்சூர் பீச்சி, வயநாடு கரபுழா- 120 மி.மீ.,
ரெட் அலர்ட்
1. மலப்புரம்,
2. கோழிக்கோடு,
3. வயநாடு,
4. கண்ணுார்,
5. காசர்கோடு
உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலெர்ட்' விடுத்து உள்ளது.
முன்கூட்டியே மழை
மஹாராஷ்டிராவில் 35 ஆண்டுகளுக்கு பிறகு தென்மேற்கு பருவமழை இவ்வாண்டு முன்கூட்டியே தொடங்க உள்ளது. அடுத்த 3 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இதற்கு முன்னர் 1990ல் முன்கூட்டியே மே 20ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.