Paristamil Navigation Paristamil advert login

ரெய்டுக்கு தி.மு.க., ஏன் சமரசம் செய்யணும்; முதல்வர் ஸ்டாலின்

ரெய்டுக்கு தி.மு.க., ஏன் சமரசம் செய்யணும்; முதல்வர் ஸ்டாலின்

26 வைகாசி 2025 திங்கள் 06:14 | பார்வைகள் : 1724


அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பான எப்.ஐ.ஆர்.கள் சம்பந்தமாக அமலாக்கத்துறை நடத்திய ரெய்டுக்கு தி.மு.க. ஏன் சமரசம் செய்ய வேண்டும்?'' என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

அவரது அறிக்கை: தமிழகம் எப்போதும் இந்தியாவின் வளர்ச்சிக்கான குருதியோட்டமாக இருப்பதை நாடு நன்கறியும். அரசியல் நிலைப்பாடு என்பது வேறு. அரசுடன் நாட்டின் நலன் கருதி ஒத்துழைப்பது என்பது வேறு. அந்த வகையில்தான், பிரதமர் தலைமையில் நடைபெற்ற இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றேன்.

மாநில உரிமை

மிரட்டலுக்கு அடிபணிந்து கட்சியை அடமானம் வைக்கும் வழக்கம் நம்மை விமர்சனம் செய்பவர்களின் தனிப்பட்ட உரிமையாக இருக்கிறது. நமக்கோ, மாநில உரிமையே முதன்மையானதாக உள்ளது. அதில் எவ்வித சமரசமுமின்றி, நீதிமன்றத்தில் சட்டப்போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டு வருகிறோம்.

தி.மு.க.,வுக்கு குறி!

அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ. போன்றவை தி.மு.கவினரைக் குறி வைத்ததுபோல இந்தியாவில் வேறு எந்தக் கட்சியையும் குறிவைத்ததில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பான எப்.ஐ.ஆர்.கள் சம்பந்தமாக அமலாக்கத்துறை நடத்திய ரெய்டுக்குத் தி.மு.க. ஏன் சமரசம் செய்ய வேண்டும்? எத்தனை முறை விளக்கமளித்தாலும் எதிரிகள் பழைய மாவையே புளிக்கப் புளிக்க அரைத்துக் கொண்டிருப்பார்கள்.

பொதுக்குழு

திருந்தவோ, வருந்தவோ மாட்டார்கள். தமிழக மக்கள் அவர்களை விரும்பவும் மாட்டார்கள். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் தி.மு.க., ஆட்சியே தொடரும். எதிரிகளின் எதிர்பார்ப்பைத் தவிடுபொடியாக்கும் தி.மு.க.,வின் நிலைப்பாட்டை உரக்க வெளிப்படுத்தவும் கூடல் நகரில் பொதுக்குழு கூடுகிறது. மதுரை பொதுக் குழுவுக்கு உங்களில் ஒருவனான நான் ரெடியாகிவிட்டேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

உரிமைக்குரலை எழுப்பினேன்!


இது குறித்து முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: டில்லிக்குச் சென்றேன்; தமிழகத்தின் உரிமைக்குரலை எழுப்பினேன். ரெய்டுகளுக்குப் பயந்து சொந்தக் கட்சிக்காரர்களுக்குக்கூட தெரியாமல் டில்லி சென்று கட்சி அலுவலகத்தைப் பார்வையிட வந்தேன் என ஊடகங்களிடம் கூறி பல கார்கள் மாறி கட்சியை அடமானம் வைத்துவிட்டு வரவில்லை.

டில்லி என்றாலே கிலி பிடித்து அஞ்சி நடுங்கும் எதிர்க்கட்சியினரின் அடி வயிற்றில் புளியைக் கரைக்க வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டதை ரசித்தபடியே டில்லி பயணம் அமைந்தது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் போது சென்னையில் பேரணி சென்று ஒற்றுமைக்குரல் எழுப்பினேன்!

நாட்டின் நலனை எப்படி தி.மு.க. விட்டுக்கொடுக்காதோ, அதுபோல மாநில உரிமைகளையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என நிடி ஆயோக் கூட்டத்தில் உரையாற்றினேன்!

தமிழகத்தின் நலன் காத்திடவும், மாநில உரிமைகளை வென்றெடுக்கவும் களம்2026க்கு ஆயத்தமாக ஜூன் 1ம் நாள் மதுரையில் நடைபெறவுள்ள பொதுக்குழுவில் உங்களைச் சந்திக்க நான் ரெடியாகி விட்டேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

10 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    3

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்