பரிஸ் மாநகராட்சி தேர்தல் 2026 - முன்னிலையில் ரஷிதா தாதி,
22 ஆனி 2025 ஞாயிறு 10:47 | பார்வைகள் : 3029
2026ம் ஆண்டு பரிஸ் நகராட்சி தேர்தலுக்கான முதல் சுற்று வாக்குப்பதிவில், கலாசார அமைச்சர் மற்றும் LR (Les Républicains) கட்சி வேட்பாளர் ரஷிதா தாதி (RACHIDA DATI) முன்னிலையில் இருப்பதாக Elabe நிறுவனத்தின் ஒரு புதிய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. இந்த கருத்துக்கணிப்பு BFMTV மற்றும் La Tribune Dimanche உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ச்சியாக பல வருடங்கள் பரிசின் மாநகரசபை முதல்வராக அன் இதால்கோ இருந்த நிலையில், அரசியலில் வேறு பதவிக்கான போட்டிக்காக, தான் மீண்டும் மாநகரசபை முதல்வராக போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்திருக்கும் சூழ்நிலையில் இந்தப் போட்டிகள் களம் கண்டுள்ளன.
அன் இதால்கோ பரிசின் மாநகர முதல்வாக இருந்த போதே அவரின் அனைத்து நடவடிக்கைகளிற்கும் எதிர்வினை ஆற்றிக் கொண்டிருந்தவர் தான் இந்த ரஷிதா தாதி,
முக்கிய தகவல்கள்:
ரஷிதா தாதி: 28%-34% வாக்கு முன்பதிவு, சூழ்நிலைகளின் அடிப்படையில்.
இடதுசாரி கட்சிகள்: ஒன்றிணைந்தால் 50% வரை வாக்குகளை ஈர்க்கும் அளவுக்கு பரந்த ஆதரவு இருந்தாலும் வாக்குகள் பிளவுபட்ட நிலையில்தான் உள்ளன. இது வாக்குச் சிதறல்களை ஏற்படுத்தும்.
David Belliard (Écologistes): இடதுசாரியில் முன்னணி வேட்பாளர், 17%-22% வரை.
Emmanuel Grégoire ((PS-PCF கூட்டணி): 16%-19%
Rémi Féraud: 14%-15%
Sophia Chikirou (LFI): அதிகபட்சம் 17%வரை.
பெயரளவில் பரிச்சயம்:
97% பேர் ரஷிதா தாதியை 'பெயரால் அறிந்திருக்கிறார்கள்
80% பேர் 'நன்றாக' அல்லது 'மிக நன்றாக' அறிந்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.
மற்ற வேட்பாளர்கள் பெரும்பாலும் 60%-70% பரிச்சயத்தில் இருக்கிறார்கள், ஆனால் பியேர்-இவ் பூர்னாசல் மற்றும் ரெமி ஃபோரோ குறைவாகவே
அறியப்படுகிறார்கள்.
இந்த நிலவரம் பார்வையில், ரஷிடா தாதி தன் கட்சியைத் தலைமைத்துவத்திற்கு இட்டுச் செல்ல வாய்ப்பு வாய்ந்த வேட்பாளர். ஆனால், இடதுசாரிகள் ஒன்றிணைந்தால், அவர்கள் பெரும்பான்மையைப் பெற முடியும் என்பதையும் இக்கணிப்பு காட்டுகிறது. ஆனால் தற்போதைய பிளவுகள் அவர்களின் வெற்றியை தடுக்கும் சூழ்நிலையை உருவாக்குகின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan