யாழில் சகோதரர்கள் மீது வாள் வெட்டு - மூவர் கைது
22 ஆனி 2025 ஞாயிறு 03:33 | பார்வைகள் : 3852
யாழ்ப்பாணத்தில் சகோதரர்கள் மீது வாள் வெட்டு தாக்குதலை நடாத்திய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்களை பொலிஸார் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உதயபுரம் பகுதியில் சகோதரர்கள் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்று இருந்தனர்.
அது தொடர்பில் தாக்குதலுக்கு இலக்கான நபர்களால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நாயன்மார் கட்டு பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , வாள் வெட்டு தாக்குதலுக்கு செல்ல பயன்படுத்தப்பட்ட மோட்டா சைக்கிள் , மூன்று கூரிய வாள்கள் என்பவற்றை மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan