Paristamil Navigation Paristamil advert login

சிக்கன் பிரட்டல்

 சிக்கன் பிரட்டல்

21 ஆனி 2025 சனி 16:29 | பார்வைகள் : 112


எத்தனை வகையான அசைவ உணவுகள் இருப்பினும் சிக்கனே அனைவருக்கும் பிடித்தமான அசைவ உணவாக உள்ளது. வீட்டில் கோழி வாங்கினால் அதைக் கொண்டு சிக்கன் கிரேவி, சிக்கன் ஃப்ரை, சிக்கன் சுக்கா என பல ரெசிபிகளை செய்து சாப்பிடு வாடிக்கையாக உள்ளது. இதற்கு என பிரத்யேகமாக மசாலாக்கள், காய்கறிகள் தேவைப்படும். ஆனால் வீட்டில் உள்ள பொருள்களை கொண்டே 10 நிமிஷத்துல செய்யுற மாதிரி ஒரு சிக்கன் ரெசிபியை பற்றி இப்போது தெரிந்துகொள்ளலாமா. இத நீங்க எந்த சாதத்துடனும் சாப்பிடலாம். சுட சுட சாதத்துடன் சாப்பிட்டால் இன்னும் அமோகமாக இருக்கும்.

தேவையான பொருள்கள்:

சிக்கன்                                  - 1/2 கிலோ
பெரிய வெங்காயம்          - 2
பல் பூண்டு                           - 6
துண்டு இஞ்சி                      - 1
கறிவேப்பிலை                    - 1 கொத்து
தயிர்                                       - 1 கப்
தக்காளி                                -  1
பச்சை மிளகாய்                  - 2
சோம்பு                                   - 1 டீஸ்பூன்
மிளகு                                      - 1 டீஸ்பூன்
மிளகாய்தூள்                       -  1 டீஸ்பூன்
மல்லிதூள்                             -  1 டீஸ்பூன்
கரம் மசாலா                        -  1 டீஸ்பூன்
உப்பு                                       - தேவையான அளவு
எண்ணெய்                           - தேவையான அளவு

செய்முறை:
சிக்கனை சுத்தமாக கழுவி தயிர் சேர்த்து தனியாக வைக்க வேண்டும்.

பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி தட்டிய இஞ்சி, பூண்டுடன் பச்சை மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும்.

கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமாக மாறிய பின்னர் நறுக்கிய தக்காளியை மசிய வதக்கியவுடன் மிளகாய் தூள் மல்லித்தூள், கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கி சிக்கனை சேர்த்து வதக்கவும்.

சிறிது சிக்கன் வேகும் வரை கடாயை மூடி வைக்கவும். இந்த நேரத்தில் மிக்சியில் மிளகு, சோம்பு சேர்த்து அரைத்து வைத்து கொள்ளலாம்.

சிக்கன் வெந்த பின்னர் அரைத்த பொடியினை சேர்த்து கொதித்த பின்னர் இறக்கினால் சிக்கன்  பிரட்டல் பரிமாற ரெடி.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்