தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி உறுதி: அடித்துச் சொல்கிறார் அமித் ஷா!
21 ஆனி 2025 சனி 13:12 | பார்வைகள் : 2504
தமிழக சட்டசபைத் தேர்தலில் உறுதியாக வெற்றி பெறுவோம்' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு: வரவிருக்கும் சட்டசபை தேர்தல்களில் பீஹார், தமிழகம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம். தமிழக சட்டசபை தேர்தலில், நிச்சயம் உறுதியான வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வருவதால் மொழி பிரச்னையை கிளப்புகின்றனர்.
பிரகாசமான எதிர்காலம்
ஆனால் இந்த விவகாரத்தில் பொதுமக்கள் மிகவும் தெளிவுடன் இருக்கின்றனர். இந்திய மொழிகளுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. தொகுதி மறு வரையறையை, யாரும் எந்த புகாரும் சொல்வதற்கும் இடமில்லாமல் செய்து முடிப்போம். தி.மு.க., இந்த பிரச்னையை கிளப்புவது 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை மனதில் வைத்து தான்.
இடஒதுக்கீடு
மக்கள் தொகை கணக்கீட்டின் முடிவுகள் 2027ம் ஆண்டு கடைசியில் கிடைக்கும். பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதால் ஒரு சில மாதங்கள் முன்கூட்டியே கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. வரும் 2029ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தல் ஆனது, பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு உடன் நடத்தப்படும். இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan