பசுமைத் திட்ட உரை – தனி ஜெட் விமானப் பயணம் - விவாதத்திற்குள்ளாகும் பிரதமரின் பயணம்

21 ஆனி 2025 சனி 09:28 | பார்வைகள் : 402
பிரான்சின் பிரதமர் பிரான்சுவா பய்ரூ, ஜூன் 19 அன்று பியரிட்ஸ் (Biarritz - Pyrénées-Atlantiques) நகரில் நடைபெற்ற 6வது மீள்சக்தி வள (ÉNERGIES RENOUVELABLES) மாநாட்டில் கலந்துகொண்டு, இதை 'செம்பருத்தி போல வளமான, முடிவற்ற சக்தி' என்று வர்ணித்தார்.
ஆனால், அவர் இந்த சுற்றுப்பயணத்தை அரசின் தனியார் ஜெட் விமானமான Falcon 900 இல் மேற்கொண்டதை Sud-Ouest பத்திரிகை வெளிச்சமிட்டது. அவர் விமானத்தில் செலவிட்ட நேரம் – மொத்தம் 2 மணி நேரம், அந்த நிகழ்வில் அவர் இருந்த 30 நமிட நேரத்தை விட அவர் பயணம் செய்தது 1h30 மணி நேரம் அதிகம்.
பிரதமரின் அணியில் உள்ளவர்கள், 'அவர் மீள் சக்தி வளத்தில் ஆர்வமுள்ளவராக இருந்ததால் இப்பயணத்தை தவிர்த்திருக்க முடியாது' என்றும், பொது விமான சேவைகள் வழியாகப் பயணிக்க அவர் வழக்கமாக முயற்சி செய்கிறார்' என்றும் தெரிவித்தனர்.
மேலும், அவர் மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு விரைவாக திரும்ப வேண்டிய சூழ்நிலை இருந்ததையும் அவர்கள் காரணமாக முன்வைத்தனர்.
தனி ஜெட் விமானங்கள், ஒரு பயணியின் மீதான கரியமில வாயுப் பாதிப்பைப் பொறுத்தவரை, சாதாரண வரிசை விமானங்களை விட 14 மடங்கு அதிகமாக வளிமாசடைவை உமிழும் என்பதையும், ஐரோப்பிய ரயில் பயணங்களை விட 50 மடங்கு அதிகமாக கரியமில வாயு வெளியிடும் என்பதையும், வுசயnளிழசவ ரூ நுnஎசைழnநெஅநவெ எனும் சுற்றுச்சூழல் அமைப்பின் ஆய்வு குறிப்பிடுகிறது.
சூழலியலுக்கான உரையில் 'மீள் உபயோக சக்தி' என்ற பசுமையான தீர்வைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் நிலையில், மிகவும் மாசு உமிழும் தனி விமானம் மூலம் அங்கு செல்வது அரசியல் மற்றும் நெறிமுறை ரீதியாக விவாதத்திற்குரிய செயலாகவும் பார்க்கப்படுகிறது.