Takata உயிர்காப்புத் திறப்பான் - உயிர் பறிக்கும் அபாயம் - விசாரணை
21 ஆனி 2025 சனி 02:18 | பார்வைகள் : 3937
2025 ஜூன் 11ஆம் தேதி மார்ன் பகுதியில், Takata உயிர்காப்புத் திறப்பான் (Airbag) வெடித்து, ஒரு 40 வயது பெண் உயிரிழந்ததையடுத்து, பரீஸ் வழக்குரைஞர் அலுவலகம் மனித உயிருக்கு அபாயம், மோசடி, மற்றும் அபாயகரமான தகவல்களை மறைத்தமை போன்ற குற்றச்சாட்டுகளில் நீதிபதிகளிடம் விசாரணை ஆரம்பமாகி உள்ளது.

இதுவரை பிரான்சில் மூன்று உயிரிழப்புகள் இந்த உயிர்காப்புத் திறப்பான்களால் ஏற்பட்டுள்ளன. அனைத்து சம்பவங்களிலும் Citroën C3 மகிழுந்துகள் இருந்தமை குறிப்பிடத்தக்கது. Tarbes, Fort-de-France மற்றும் Reims ஆகிய பகுதிகளில் நடைபெற்ற விசாரணைகள் தற்போது பரீஸ் இடைமாநில நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தமாக 18 பேர் உயிரிழந்து, 25 பேர் காயமடைந்துள்ளனர், இதில் பெரும்பாலானவை கடல்கடந்த பிராந்தியங்களில் (Outre-mer) நிகழ்ந்தவையாகும்.
இந்த வுயமயவய நிறுவனம் அது பொருத்தப்பட்ட வாகனங்கள் மீளப்பபெறப்பட்டு மாற்றீடு செய்யப்படுவதுடன் இந்த உயிரிழப்புகளிற்காகப் பாரிய தண்டனையையும் எதிர் நோக்க உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan