Paristamil Navigation Paristamil advert login

இனி ஸ்மார்ட்போன்களுக்கு பழுதுபார்த்தல் மற்றும் நீடித்த பயன்பாட்டுக்கான லேபிள்!

இனி ஸ்மார்ட்போன்களுக்கு பழுதுபார்த்தல் மற்றும் நீடித்த பயன்பாட்டுக்கான லேபிள்!

20 ஆனி 2025 வெள்ளி 22:23 | பார்வைகள் : 4729


ஐரோப்பிய ஒன்றியம் புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது, இது ஸ்மார்ட்போன்கள் சந்தையில் விற்கப்படுவதற்காக பழுதுபார்த்தல் மற்றும் நீடித்த பயன்பாட்டுக்கான லேபிளை கட்டாயமாக்குகிறது. 

இந்த லேபிள், பயனாளர்களுக்கு மின் செலவு, பேட்டரி நீடித்த திறன், வீழ்ச்சி எதிர்ப்பு, நீரெதிர்ப்பு மற்றும் பழுது பார்க்க எளிமைத்தன்மை ஆகியவற்றைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். இதன் நோக்கமானது வாங்குவோர் விழிப்புணர்வுடன் தேர்வுகளை தெரிவு செய்யவும், 2030 ஆம் ஆண்டுக்குள் ஸ்மார்ட்போன் விற்பனையை 22 சதவீதமாக குறைக்கவும் ஆகும்.

இந்த லேபிளில் A முதல் G வரையிலான மின்சார திறன் மதிப்பீடு, வீழ்ச்சி சோதனை மதிப்பீடு மற்றும் பேட்டரி சுழற்சி அளவீடுகள் இடம்பெறும். பேட்டரி செயல்பாடு பயனாளரின் பயன்பாட்டை பொறுத்து மாறுபடும். 

மேலும், ஒரு QR குறியீடு மூலம் மேலதிக தகவல்களையும் பெற முடியும். இதன் மூலம், பயனர்கள் தங்கள் சாதனங்களை நீண்ட காலம் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்