எதிர்வுகூறலை முறியடித்த வெப்பம்! - இன்று பதிவு!!

20 ஆனி 2025 வெள்ளி 19:21 | பார்வைகள் : 834
இன்று ஜூன் 20, வெள்ளிக்கிழமை எதிர்வுகூறப்பட்ட வெப்பத்தை விட மிக அதிகமாக வெப்பம் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய நாளில் அதிகபட்சமாக 38°C எனும் வெப்பம் பதிவாகும் என எச்சரிக்கப்பட்ட நிலையில், அதற்கு அதிகமாக 39°C வெப்பம் பதிவாகியுள்ளது. Vailhan (Hérault) 39°C நகரில் இந்த வெப்பம் இன்று மாலை 5 மணிக்கு பதிவாகியுள்ளது.
இன்று அதிக வெப்பம் நிலவிய முதல் ஆறு மாவட்டங்கள் இவை :
Vailhan (Hérault) 39°C
Grospierres (Ardèche) 38,8°C
Céret (Pyrénées-Orientales) 38,7°C
Tusson (Charente) 38°C
Saintes (Charente-Maritime) 38°C Fontenay-le-Comte (Vendée) 38°C
அதேவேளை, நாளை சனிக்கிழமை ஜூன் 21 ஆம் திகதியும் நாட்டின் பல பகுதிகளி அதிகூட வெப்பம் பதிவாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.