ஈரான் - இஸ்ரேல் குறித்த பாராளுமன்ற விவாதம் - மக்ரோன்
20 ஆனி 2025 வெள்ளி 19:41 | பார்வைகள் : 10799
பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன், ஈரான்–இஸ்ரேல் போரைக் குறித்த விவாதத்தை நாடாளுமன்றத்தில் நடத்த அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், இந்த போருடன் கூடிய காசா மற்றும் உக்ரைனுக்கான நிலவரங்களைப் பற்றியும் பேச அரசியல் கட்சி தலைவர்களுடன் விரைவில் சந்திப்பு நடத்தப்போவதாகவும் அறிவித்தார்.
இதையடுத்து, மக்ரோன் நாடாளுமன்றத்தில் ஈரான்–இஸ்ரேல் போர் குறித்த விவாதத்தை நடத்துமாறு அரசை வலியுறுத்தினார். 'நாம் அரசியலமைப்பின் 50-1வது யாப்பின்படி இந்த விவாதத்தை நடத்த வேண்டும்,' என அவர் கூறினார். இந்த விவாதம் குறிப்பாக La France Insoumise *போன்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு பதிலாகும்.
மக்ரோன் கூறுகையில், தற்போது நடைபெறும் இராணுவ நடவடிக்கைகள் மட்டுமே இந்த அணுசக்தி அச்சுறுத்தலைத் தீர்க்க முடியாது. பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என தெரிவித்தார்.
ஈரானுக்கு அணுஆயுதம் கிடைத்தால் ஏற்படக்கூடிய ஆபத்து குறித்தும் அவர் மீண்டும் எச்சரித்தார்.
இவ்வேளை, ஜெர்மனி, பிரான்ஸ், ஐக்கிய இராஜ்யம் ஆகிய நாடுகளின் வெளிவிவகார மந்திரிகள் இன்று ஜெனீவாவில் ஈரான் பிரதிநிதி அபாஸ் அராக்சியுடன் சந்திக்க உள்ளனர். மக்ரோன் கூறியபடி, 'அணுசக்தி, ஏவுகணைச் செயல்பாடுகள் மற்றும் ஈரானில் கைது செய்யப்பட்டுள்ள பிரெஞ்சுக் குடிமக்களை விடுவிப்பது உள்ளிட்ட விவரங்களுடன் கூடிய முழுமையான பேச்சுவார்த்தைத் திட்டத்தை' முன்வைக்க உள்ளனர்.
காசாவில் ஏற்படும் மனிதாபிமான மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக, உடனடி ஏவுகணை நிறுத்தம், மீண்டும் மனிதாபிமான உதவிகளை ஆரம்பிக்க வேண்டும் மற்றும் அரசியல் முயற்சிகளை மீண்டும் தொடங்குவதும் அவசியம் என மக்ரோன் தெரவித்தார்.
மேலும், NATO உச்சி மாநாட்டுக்குப் பிறகு, மக்ரோன் “Saint-Denis” வடிவத்தில் (அதாவது, நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சி தலைவர்களை அழைத்து கலந்துரையாடும் முறை) அனைத்து அரசியல் அமைப்புகளையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan