குற்றச்செயல்களுக்கு தண்டனை வயது 16! - நீதித்துறை அமைச்சர்!!

20 ஆனி 2025 வெள்ளி 15:25 | பார்வைகள் : 4837
குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறுவர்களுக்கு தண்டனை வயது 16 ஆக குறைக்கப்படவேண்டும் என என நீதித்துறை அமைச்சர் Gérald Darmanin கருத்து ஒன்றை முன்மொழிந்துள்ளார்.
தாக்குதல்கள், வன்முறையில் ஈடுபடுவர்கள் 18 வயது நிரம்பவில்லை எனும் காரணத்தை காட்டி சட்டத்தின் தண்டனையில் இருந்து தப்பக்கூடாது என்பதே அதன் அர்த்தமாகும். எனவே வயதுவந்தோருக்கான தண்டனைக்காலத்தை 16 வயதாக குறைக்கும்படி Gérald Darmanin முன் மொழிந்துள்ளார்.
குற்றச்செயல்களில் சிறுவர்களுக்கான தன்மை எதுவும் இல்லை எனும் போது, தண்டனைகளிலும் அது இருக்கக்கூடாது எனவும், வயது வரம்பை 16 ஆக குறைக்க வேண்டும் எனவும் அவர் முன்மொழிந்துள்ளார்.
இது தொடர்பான வரைவு பாராளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025