Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : இரு பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்!!

பரிஸ் : இரு பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்!!

20 ஆனி 2025 வெள்ளி 13:25 | பார்வைகள் : 3451


 

பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் உள்ள இரு பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 20. இன்று வெள்ளிக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

18 ஆம் வட்டாரத்தின் Rue Gustave-Rouanet மற்றும் Rue Lepic  வீதிகளில் உள்ள l’école Gustave-Rouanet மற்றும் l’école Lepic ஆகிய பாடசாலைகளுக்கு இன்று காலை தொலைபேசி வழியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

உடனடியாக பாடசாலையில் இருந்த மாணவர்கள் ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டு பாடசாலை கட்டிடங்கள் மற்றும் வளாகங்கள் உடனடியாக சோதனையிடப்பட்டது.

ஆனால் வெடிகுண்டு எதனையும் அங்கிருந்து மீட்கவில்லை. சிலமணிநேர இடைவேளையின் பின்னர் மீண்டும் பாடசாலை ஆரம்பமானது.

வர்த்தக‌ விளம்பரங்கள்