Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலின் மைக்ரோசொவ்ட் அலுவலகத்திற்கு அருகில் ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேலின் மைக்ரோசொவ்ட் அலுவலகத்திற்கு அருகில் ஏவுகணை தாக்குதல்

20 ஆனி 2025 வெள்ளி 10:18 | பார்வைகள் : 1874


இஸ்ரேலின் பீர்செவாவில் ஈரான் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல் காரணமாக மைக்ரோசொவ்ட் அலுவலகத்திற்கு அருகில் தீமூண்டுள்ளது.

தென்பகுதி நகரின் பல வீதிகளில் தீயை காணமுடிகின்றது,இது தொடர்பிலான வீடியோவை இஸ்ரேலின் அவசரசேவை பிரிவு வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலின் தென்பகுதி மாவட்டத்தின் திறந்தவெளிகளில் ஏவுகணைகளின் வெடிபொருட்கள் விழுந்துள்ளன சொத்துக்களிற்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

உயிரிழப்பு ஏற்படவில்லை என இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று பீர்செவா பகுதியில் இஸ்ரேலின் மருத்துவமனையொன்று தாக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது.

பீர் செவா நெவா பாலைவனத்தில் அமைந்துள்ளது இங்கு இஸ்ரேலின் விமானபடை தளம் உள்ளது குறிப்பிடத்தக்கது.    

 

வர்த்தக‌ விளம்பரங்கள்