வினோத் ரஜினியை இயக்குகிறாரா ?
19 ஆனி 2025 வியாழன் 16:12 | பார்வைகள் : 2365
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களை இயக்கினார் வினோத். தற்போது விஜய் நடிப்பில் ஜனநாயகன் படத்தை இயக்கியிருக்கிறார். அரசியல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது.
மேலும், விஜய் படத்தை அடுத்து தனுஷ் நடிப்பில் ஒரு படத்தை வினோத் இயக்குவதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், சமீபத்தில் ரஜினிகாந்தை சந்தித்தும் அவர் ஒரு கதை சொல்லி இருப்பதாக புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. முதலில் ரஜினியை சந்தித்து தன்னிடமிருந்த ஒன் லைன் கதையை கூறிய வினோத், அதன்பிறகு அந்த கதையை டெவலப் பண்ணி மீண்டும் ரஜினியை சந்தித்து சொல்லி இருக்கிறாராம்.
தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வரும் ரஜினி, அதன்பிறகு வினோத் இயக்கத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.


























Bons Plans
Annuaire
Scan