பரிஸில் RATP வேலைநிறுத்தம் - இந்த வெள்ளிக்கிழமை முழுமையாக மூடப்படும் மெட்ரோ வழித்தடம்!

19 ஆனி 2025 வியாழன் 12:27 | பார்வைகள் : 3064
2025 ஜூன் 20 வெள்ளிக்கிழமை நடைபெறும் வேலைநிறுத்தம் காரணமாக, பரிஸில் மூன்று மெட்ரோ வழித்தடங்களில் போக்குவரத்து குறைந்தளவில் இருக்கும். குறிப்பாக,
மெட்ரோ வழித்தடம் 3bis வெள்ளிக்கிழமை முழுமையாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வழித்தடம் 3 ஒரு வழியாக மட்டுமே (ஒரு மெட்ரோக்கு இடையில் ஒரு மெட்ரோ) இயங்கும்.
வழித்தடம் 13 இயலுமான அளவில் 75% சேவையை (நான்கு மெட்ரோக்கு மூன்றுமெட்ரோ) வழங்கும்.
FO, Solidaires மற்றும் La Base RATP யின் ஒருங்கிணைப்பில் இந்த வேலைநிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், வழித்தடம் 3 மற்றும் 3bis இல் பணியாற்றும் ஓட்டுநர்களின் வேலைநிலைகள் தொடர்ந்து மோசமாகும் நிலையில், இதற்கான ஆதரவாக வெள்ளிக்கிழமை நடைபெறும் வேலைநிறுத்தம் நடைபெறுவதாகவும் RATP சங்கங்கள் தெரிவிக்கின்றன. மேலும், சில ஊழியர்கள் எதிர்கொண்ட தண்டனைகள் மற்றும் ஒழுங்குமுறைக்கான நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படுகின்றது.
இதனால் பாதிப்பிற்குள்ளாகும் பயணிகள், மாற்று வழித்தடங்களைத் திட்டமிட்டு பயணிக்க பரிந்துரைக்கப்படுகின்றனர்.
இல்லையேல், வெப்ப அலைவழி பரபரப்பாகும் நேரத்தில் பெரும் கூட்டத்துடன் பயணிக்க தயாராக இருக்க வேண்டும்.
RATP, பயணத்தின் போது தொடர்ந்து தண்ணீர் குடிப்பதன் அவசியத்தை நினைவூட்டுகின்றது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025