பிரான்சில் கருத்துக் கணிப்பு - ஈரான் அணு ஆயுதம் பெறக்கூடாது!
19 ஆனி 2025 வியாழன் 02:39 | பார்வைகள் : 8238
CNEWS, Europe 1 மற்றும் Journal du Dimanche ஆகியவற்றுக்காக CSA நிறுவனம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில்
பிரான்சில் உள்ளவர்களில் 87% பேர், 'ஈரான் அணு ஆயுதம் பெறக்கூடாது' எனத் தெரிவித்துள்ளனர்.
இது இஸ்ரேல், கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து இரானுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி வரும் சூழலில் வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதல்கள், ஈரான் அணுகுண்டு உருவாக்குவதற்கான முயற்சியை தடுக்கவே என கூறப்படுகிறது.
இந்தக் கருத்துக் கணிப்பில் ஈரானிற்கு எதிராக கருத்துத் தெரிவித்தவர்களில்
பெண்கள்: 89%
ஆண்கள்: 86%
வயது:
65 வயதுக்கும் மேல்: 92%
18-24 வயது: 78%
அரசியல் கட்சி வாரியான
வலதுசாரி (Droite): 93%
இடது சாரி (Gauche): 88%
தீவிi வலதுசாரி (Extrême droite): 83%
தற்போதைய ஆட்சியை ஆதரிப்பவர்கள்: 92%
இந்த முடிவுகள், அணுஆயுதப் பரவலை எதிர்க்கும் பிரஞ்சுப் பொது மக்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது, மேலும் இது பிரான்ஸ் அரசின் எதிர்கால வெளியுறவுக் களத்தில் இது முக்கிய பங்கு வகிக்கக்கூடும்.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan