பிரெஞ்சு மக்களை மீட்க வழித்தடங்கள் - வெளிவிகார அமைச்சு!
19 ஆனி 2025 வியாழன் 01:18 | பார்வைகள் : 2757
நேற்று புதன்கிழமை பிரான்ஸ் செனட் சபையில் நடைபெற்ற விவாதத்தின் போது வெளிவிவகார அமைச்சர் ஜோன்-நொயல் பாரோவிடம் (Jean-Noël Barrot) மார்ன் பகுதியைச் சேர்ந்த Les Indépendants கட்சியைச் சேர்ந்த செனேட்டர் செத்ரிக் செவலியரால் (Cédric Chevalier) நேரடியாகக் கேள்விகளை எழுப்பினார்.
அவர் இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள பிரெஞ்சு மக்களிற்கான 'பாதுகாப்பான வெளியேற்ற வழித்தடங்களை' உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
'எங்கள் வெளிவிவகார துறை செயலில் ஈடுபட வேண்டிய நேரம் இது. எவ்வாறான நடவடிக்கைகள் மூலம் நம்முடைய குடிமக்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் மீட்டுத் தரப்போகிறீர்கள்?' என்று செனட்டர் கேட்டார்.
அதற்குப் பதிலளித்த வெளிவிகார அமைச்சர் பாரோ
தற்போது எந்தவிதமான முழுமையான மீட்பு நடவடிக்கையும் (rapatriement) திட்டமிடப்படவில்லை. பல நாடுகள் தங்களது தூதரகப் பணியாளர்களை முழுமையாக வெளியேற்றியிருந்தாலும் பிரான்ஸ் அப்படிப்பட்ட முடிவெடுக்கவில்லை
சூழ்நிலை எப்படியிருந்தாலும், நமது பிரெஞ்சு சமூகத்துடன் இணைந்து நின்று கொள்வதே பிரான்ஸ் தாயகத்தின் கௌரவமாகும்
இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் துவங்கிய வெள்ளிக்கிழமையிலிருந்து, பிரான்ஸ் தனது குடிமக்களிடம் தொடர்புகொண்டு வருகிறது. மேலும், தற்காலிகமாக உள்ள பயணிகள் "Fil d’Ariane" என்ற அரசு கண்காணிப்பு வசதியில் தங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று ஊக்குவிக்கப்படுகிறது.
இத்துடன்இ 24 மணி நேரம், வாரத்தில் 7 நாட்கள் செயல்படும் அவசர உதவி தொலைபேசி சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. வெளியேறும் வழிகளை தெளிவாக்கும் முயற்சியாக, தூதரகங்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
விமான நிறுவனங்களுடன் இடங்களை உறுதி செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மேலும் ஈரானிலிருந்து அர்மேனியா மற்றும் துருக்கி வழியாகவும் இஸ்ரேலிலிருந்து ஜோர்டான் மற்றும் எகிப்து வழியாகவும் வெளியேறும் பாதைகள் தற்போது திட்டமிடப்பட்டு வருகின்றன
என்று வெளிவகார அமைச்சர் விளக்கி உள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan