Paristamil Navigation Paristamil advert login

பெரி பெரி பூரி

பெரி பெரி பூரி

18 ஆனி 2025 புதன் 18:35 | பார்வைகள் : 129


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு பூரி. பூரியுடன் கிழங்கு சைட் டிஷ் வைத்தால் எல்லாருக்கும் பிடிக்கும். பூரி வழக்கம் போல தினமும் செய்யாமல் ரெண்டு உருளைக்கிழங்கு சேர்த்து இந்த வித்தியாசமான பெரி பெரி பூரி ட்ரை பண்ணுங்க டேஸ்ட் சூப்பரா இருக்கும் சைட் டிஷ் கூட தேவைப்படாது. டிபன் பாக்ஸ் கூட இது செஞ்சு டக்குன்னு கட்டி குடுத்துடலாம்.

பெரி பெரி பூரி செய்ய தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு, கோதுமை மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகம்,சில்லி ப்ளேக்ஸ், ஓமம், கசூரி மெய்தி, கொத்தமல்லி, மல்லி, தண்ணீர், எண்ணெய், தேவையான அளவு உப்பு, ரவை.

செய்முறை விளக்கம்: முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வேகவைத்த உருளைக்கிழங்கை துருவி எடுத்துக் கொண்டு அதோடு மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, சீரகம், சில்லி ப்ளேக்ஸ், ஓமம், கொத்தமல்லி இலை, கசூரி மெய்தி, ரவை, கோதுமை மாவு சேர்த்து தண்ணீர் விட்டு  பிசைந்து எடுத்து கொள்ள வேண்டும்.

பின்னர் மாவு பிசைந்து வைத்து 10 நிமிடங்கள் கழித்து, சிறிய உருண்டைகளாக பிடித்து பூரி பதத்தில் தேய்த்து, பூரி பொரிக்க தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேய்த்து எடுத்த மாவை போட்டு எடுத்தால் சுவையான பெரி பெரி பூரி ரெடி.

பூரி என்றாலே பிடிக்கும் அதுவும் இந்த கிரிஸ்பியான பெரி பெரி பூரி செய்தால் குழந்தைகளும் இன்னும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை செய்வது மிகவும் எளிது. கண்டிப்பா ஒரு டைம் இந்த பெரி பெரி பூரி ட்ரை பண்ணி பார்த்து என்ஜாய் பண்ணுங்க.

வர்த்தக‌ விளம்பரங்கள்