கொழும்பு நகரை மாற்றுவோம் - புதிய மேயரின் அழைப்பு

18 ஆனி 2025 புதன் 15:32 | பார்வைகள் : 1303
கொழும்பு மாநகர சபையின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஒருபோதும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளப் போவதில்லை என்றும், தனது வெற்றி ஒரு கூட்டு முயற்சியின் விளைவாகும் என்றும் கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கெலி பல்தசார் தெரிவித்துள்ளார்.
இன்று (18) காலை பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அவர், மக்களின் பங்கேற்புடன் கொழும்பின் பிரச்சினைகளைத் தீர்க்க நம்புவதாகவும் அவர் கூறினார்.
“இந்த நகரத்தையும் மாற்றுவோம்” என்று குடிமக்கள் குரல் எழுப்பியதாகவும் கூறிய மேயர், இந்த நகரத்தை மாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது என்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டார்.
கொழும்பு இலங்கையின் பணக்கார நகரமாக இருந்தாலும், அதன் இருண்ட பக்கம் இப்போது கொழும்பை மூழ்கடித்துள்ளதாக கூறிய அவர், நகரத்தில் வாழும் மக்களுக்கு வெளிச்சம் வழங்குவதில் தனக்கு மிகப்பெரிய பங்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஒழுங்கற்ற திட்டங்கள் காரணமாக கொழும்பில் பல பெரிய பிரச்சினைகள் இருப்பதாகவும், அவை அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கொழும்பு நகரத்தை உலகின் மிகவும் வளர்ந்த நகரங்களில் ஒன்றாக மாற்ற வேண்டும் என்றும், கட்சி அல்லது நிற வேறுபாடின்றி 117 உறுப்பினர்களின் கூட்டுப் பணியிலேயே வெற்றி அடங்கியுள்ளது என்றும், இதற்கு ஆதரவளிக்குமாறும் கொழும்பு மேயர் கேட்டுக் கொண்டார்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025