3600 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்கும்- உலகை மிரளவைத்த சீனாவின் கண்டுபிடிப்பு
18 ஆனி 2025 புதன் 14:02 | பார்வைகள் : 2099
உலகை மிரளவைக்கும் வகையில், சீன விஞ்ஞானிகள் 3600°C வெப்பத்தை தாங்கும் ஒரு பொருளை உருவாக்கியுள்ளனர்.
அமெரிக்காவின் F-35 மற்றும் பிரான்சின் Rafale போர் விமானங்கள் உலகின் சிறந்தவையாகக் கருதப்பட்டாலும், இப்போது சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள புதிய வகை செராமிக் பொருள் அவற்றை மிஞ்சும் வகையில் ஆச்சரியப்படுத்துகிறது.
South China Morning Post வெளியிட்ட அறிக்கையின் படி, ஹஃப்னியம் (Hafnium), டான்டாலம் (Tantalum), ஸிர்கோனியம் (Zirconium), மற்றும் டங்க்ஸ்டன் (Tungsten) என்ற நான்கு உலோகங்களை கலப்பதன் மூலம் இந்த வலுவான செராமிக் உருவாக்கப்பட்டுள்ளது.
இது 3600°C வரை வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் கொண்டது - இது NASA space shuttle பயன்பாட்டில் உள்ள உலோகங்களைவிட மூன்று மடங்கு சக்திவாய்ந்ததாகும்.
உங்கள் சமையலறையில் உள்ள கேஸ் அடுப்பு வெறும் 200°C வெப்பத்தையே வெளியிடும்.
ஆனால் இந்த புதிய பொருள் எரிவதற்கு இடமளிக்காது, உருகாது, உடையாது.
இதன் சக்திக்கு காரணம், இதில் உருவாகும் oxide layer, இது ஆக்ஸிஜன் மற்றும் தீயை எதிர்த்து பொருளை பாதுகாக்கிறது.
இதில் முக்கிய பங்கு வகிப்பது டங்க்ஸ்டன், இது ஆக்ஸிஜனுடன் எதிர்த்துப் போராடும் தன்மையைக் கொண்டது.
முன்பு இத்தகைய பொருட்களை சோதிக்க ஹைப்பர்சோனிக் சுரங்கங்கள் அல்லது ரொக்கெட்டுகள் பயன்படுத்தப்பட்டது.
ஆனால் இப்போது சீனாவின் விஞ்ஞானிகள் லேசர் அடிப்படையிலான சோதனை முறையை உருவாக்கியுள்ளனர்.
இது வெப்பத்தை 3800°C வரை உயர்த்தி பொருளை விரைவில் சோதிக்க உதவுகிறது.
இந்த கண்டுபிடிப்பு, எதிர்கால விமானங்கள், விண்வெளிக் கப்பல்கள் மற்றும் மூன்றாம் தலைமுறை ஆயுத தொழில்நுட்பம் ஆகியவற்றில் புரட்சியை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan