யாழில் உணவருந்திய பின்னர் மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு
18 ஆனி 2025 புதன் 08:53 | பார்வைகள் : 2020
யாழ்ப்பாணத்தில் வீட்டில் உணவருந்திய பின்னர் மயங்கி சரிந்த கந்தர்மடம் பகுதியை சேர்ந்த கேதீஸ்வரன் எனோக்ஹசான் 20 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டில் நேற்றைய தினம் உணவருந்திய நிலையில் மயங்கி சரிந்துள்ளார். அதனை அடுத்து வீட்டார் இளைஞனை யாழ் . போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை, இளைஞன் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இரத்த வாந்தி எடுத்த முதியவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நெடுந்தீவை சேர்ந்த இராமநாதன் முத்துலிங்கம் (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார்.
நெடுதீவில் உள்ள தனது வீட்டில் கடந்த 15ஆம் திகதி இரத்த வாந்தி எடுத்துள்ளார். அவரை நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (17.6.25) உயிரிழந்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan