Paristamil Navigation Paristamil advert login

இது தான் திராவிட மாடலா: தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

இது தான் திராவிட மாடலா: தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

18 ஆனி 2025 புதன் 13:57 | பார்வைகள் : 1386


சத்துணவில் புழு நெளிவதால் உண்ண முடியவில்லை என்று ஏழை குழந்தை கூறும் நிலையில் இது தான் திராவிட மாடலா, என்று மாநில பா.ஜ., தலைவர் நயினார் நகேந்திரன் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

கள்ளக்குறிச்சியில் உள்ள அரசுபள்ளியில் பயிலும் ஏழை குழந்தை, தான் வாங்கிய சத்துணவில் புழு, பூச்சி இருப்பதால் அதை எடுத்துப்போட்டாலும் திரும்ப,திரும்ப வருகிறது. இது பற்றி என்னுடைய பெற்றோரிடம் சொல்லியபிறகு அவர்கள் வந்து சம்பந்தபட்டவர்களிடம் கூறியபிறகும் பூச்சியாக உள்ளதாக கூறும் வீடியோவை நயினார் நாகேந்திரன் பகிர்ந்துள்ளார்.


அவரது அறிக்கை:

“தனி மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று பாடிய பாரதி பிறந்த மண்ணில், இன்று “சத்துணவில் புழு நெளிவதால் உண்ண முடியவில்லை” என ஒரு ஏழை வீட்டுக் குழந்தை மழலை மொழியில் புலம்புவது மனதை உலுக்குகிறது.

ஏற்கனவே அடிப்படை வசதிகள் இல்லாமை, ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு அவலங்களால் தமிழக அரசுப்பள்ளிகள் சீரழிந்து கிடக்க, சத்துணவிலும் ஊழல் செய்து படிக்கும் பிள்ளைகளின் வயிற்றில் அடிப்பது கடும் கண்டனத்திற்குரியது.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்