கோதுமை மா மசாலா தோசை
17 ஆனி 2025 செவ்வாய் 16:50 | பார்வைகள் : 1761
கோதுமை மாவில் நார்ச்சத்து அதிகம் என்பதால் பலரும் கோதுமையில் சப்பாத்திதான் அதிகமாக சுடுவார்கள். அப்படி சப்பாத்தி மட்டுமே சாப்பிட்டு போர் அடித்தால் இந்த ரெசிபி டிரை பண்ணி பாருங்க. இந்த கோதுமை மசால் தோசை காலை உணவுக்கு சிறந்ததாக இருக்கும். வயிறும் நிறைவாக இருக்கும். நீண்ட நேரம் பசிக்காது.
தேவையான பொருட்கள் : கோதுமை - 1 கப்
அரிசி மாவு - 1 கப்
மஞ்சள் - 1/2 tsp
சீரகம் - 1 tsp
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தே. அளவு
பச்சை மிளகாய் - 1
செய்முறை :
இரண்டு மாவையும் கலந்து அதில் தண்ணீர் ஊற்றி மாவு பதத்தில் கலக்கிக்கொள்ளவும்.
அதில் மஞ்சள் சேருங்கள். சீரகம் சேர்த்து கொத்தமல்லி , கறிவேப்பிலையை நறுக்கிப் போடவும். மாவை நன்கு கலக்கவும்.
உப்பு சேர்த்துக்கொள்ளவும். பின் நன்குக் கலக்கி எப்போதும் போல் தோசை சுடவும். சுவையான கோதுமை மாவு மசால் தோசை தயார்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan