ZFE பிராந்தியங்களிற்கு இறுதி அவகாசமா?
17 ஆனி 2025 செவ்வாய் 15:39 | பார்வைகள் : 5440
பிரான்ஸில் சுற்றுச்சூழல் காரணமாக உருவாக்கப்பட்ட குறைந்த வெளியீட்டு மண்டலங்களான ZEE (zones à faibles émissions) இனை நீக்கும் முன்மொழிவுடன் கூடிய 'எளிமைப்படுத்தல் சட்டம்', இன்று பாராளுமன்றத்தில் தள்ளுபடியாகும் அபாயத்தில் உள்ளது.

மக்ரோனிஸ்ட்கள், தங்களே தங்களுக்கு எதிரான விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதெனக் கூறி, சட்டத்திற்கு எதிராக வாக்களிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
அவர்கள் சட்டம் மீண்டும் செனட்டில் இருந்து மென்மையான வடிவில் திரும்ப வர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
ZFE பிராந்தியங்கள் பழைய மற்றும் அதிக மாசு ஏற்படுத்தும் வாகனங்களை தடை செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டன. ஆனால் இது பல பகுதிகளில் சமூக மற்றும் வர்த்தக சிக்கல்களை ஏற்படுத்தியதால், வலதுசாரி கட்சிகள் இதை நீக்க வலியுறுத்துகின்றன.
இன்யை சட்ட விவாதத்தில், வணிக ஒப்பந்தங்கள், மதுபான உரிமம், அரசு முகவர்கள போன்றவற்றைக் குறைப்பது போன்ற பல 'எளிமைப்படுத்தும்' முயற்சிகள் உள்ளன. ஆனால், சுற்றுச்சூழல் தொடர்பான சட்டங்களை தவிர்த்து அதன் முக்கியத்துவத்தைக் குறைக்கும் முயற்சியாக இது விமர்சிக்கப்படுகிறது.
EPR (Ensemble pour la République) நாடாளுமன்றக் குழு, சட்டத்திற்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளது. இது இடதுசாரிகளின் எதிர்ப்புடன் சேரும் போது, சட்டம் ஒட்டுமொத்தமாக தள்ளுபடியாகும் வாய்ப்பு உருவாகிறது.
தள்ளுபடியானால்!
சட்டம் மறுதடவையாக செனட் மற்றும் தேசிய சபை உறுப்பினர்களின் கலந்துரையாடல் குழுவுக்கு (CMP) அனுப்பப்படும். ஆனால் தற்போது 'கையிலே சட்டம் இல்லாமல்' CMP க்கு செல்லும் நிலை உருவாகும் அபாயம் உள்ளது.
ZFE-வை நீக்கும் முயற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சொந்த வாகனங்களின் உரிமை ஆகிய இரண்டுக்கும் இடையே பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan