Paristamil Navigation Paristamil advert login

பரிசுக்கு திரும்பும்போது என்னிடம் மன வேதனைகள் மட்டுமே இருக்கும் – தெல் அவிவில் சிக்கிய பிரெஞ்சுப் பெண்!

பரிசுக்கு திரும்பும்போது என்னிடம் மன வேதனைகள் மட்டுமே இருக்கும் – தெல் அவிவில் சிக்கிய பிரெஞ்சுப் பெண்!

17 ஆனி 2025 செவ்வாய் 12:42 | பார்வைகள் : 6765


நீஸில் வசிக்கும் 31 வயதான டொரித் நாஒன் (Dorith Naon) சமூக வலைதளங்களில் பிரபலமானவர். இவர் ஓர் ஓரினச் சேர்க்கையாளர்களின் ஆர்வலர். அவர் இஸ்ரேலின் ப்ரைட் நிகழ்வில் கலந்துகொள்ள சென்றபோது, இஸ்ரேல் மற்றும் ஈரானின் தாக்குதல்கள் தொடங்கின.

 

Dorith%20Naon.jpg

 

ஈரானின் வான் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களால் கடந்த இரவில் நிலக்கீழ் அறையில் உள்ள பாதுகாப்புக் கூடத்தில் தங்க வேண்டியதாகிவிட்டது. 'தொலைக்காட்சியில் பார்ப்பது வேறு, அதை நேரில் அனுபவிப்பது வேறு. நாம் சிறையில் சிக்கியிருப்பதைப் போல இருந்தது,' என கூறுகிறார்.

தெல் அவீவின் விமான நிலையம் மூடப்பட்டதால் வெளியேற முடியவில்லை என்றும், பிரான்ஸ் தூதரகத்திலிருந்து எந்தவிதமான உதவியும் இல்லை என்றும் அவர் கடும் கோபத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.'Google-ல் தேடிப் பாருங்கள்' என்பதே தூதரக பதிலாக இருந்தது என புகார் கூறியுள்ளார்.
    
இஸ்ரேலும் வெஸ்ட் பாங்கையும் கடந்து ஜோர்டான் எல்லைக்குச் சென்றதும், அங்கிருந்து பேருந்தில் வெளியேற முயற்சித்ததையும் அவர் பதிவு செய்துள்ளார். எனினும், ஜோர்டான் வான்வழி இப்போது இரவில் அடைக்கப்படுகிறது என தூதரகம் தெரிவித்துள்ளது.

'வாழ்க்கையில் முதன்முறையாக குண்டுத் தாக்குதல் எச்சரிக்கை ஒலிகள் கேட்கப்பட்டன, என் கைபேசியில் சிவப்பு எச்சரிக்கை வந்தது. நான் ஓய்வெடுக்க வந்தேன். ஆனால் மன வேதனைகளுடன் திரும்பவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேன்,' என டொரித் தனது வேதனையைக் கூறியுள்ளார்.
 

3 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026