Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

மீண்டும் உயிரைப்பறித்த airbag!  - தொடரும் அவலம்!!

மீண்டும் உயிரைப்பறித்த airbag!  - தொடரும் அவலம்!!

17 ஆனி 2025 செவ்வாய் 12:08 | பார்வைகள் : 9575


 

மகிழுந்துகளுக்கான airbag பாதுகாப்பு பகுதியை தயாரிக்கும் Takata 

நிறுவனத்தின் ஊழல் காரணமாக உயிர்பலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. Reims நகரில் இடம்பெற்ற விபத்தொன்றில் airbag சரியாக செயற்படாததால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாற்பது வயதுடைய பெண் ஒருவரும் அவரது 14 வயதுடைய மகளும் ஜூன் 11 அன்று  Citroën C3 மகிழுந்தில் பயணித்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விபத்து ஒன்றில் சிக்கியுள்ளனர். இதில் சிறுமி காயங்களுடன் உயிர்பிழைக்க, மகிழுந்தைச் செலுத்திய தாய், உயிரிழந்துள்ளார்.

 

விசாரணைகளில் அவரது மகிழுந்தில் இருந்த சாரதி பாதுகாப்பு கவசமான airbag சரியாக செயற்படவில்லை என தெரியவந்துள்ளது. 
 

ஜப்பான் நிறுவனமான Takata தயாரித்த airbag மிகவும் குறைந்த தரத்தைக் கொண்டது என தெரிவிக்கப்பட்டு அது தொடர்பில் நீதிமன்ற  விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. இதுவரை 11 பேர் airbag பழுது காரணமாக உயிரிழந்துள்ளனர். அவர்களில் பிரான்சில் பதிவான இரண்டாவது உயிரிழப்பு இதுவாகும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்