ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை மையம் தகவல்
17 ஆனி 2025 செவ்வாய் 15:29 | பார்வைகள் : 2863
தெற்கு குஜராத், மேற்குவங்கம் அருகே 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கத்தில் குறைந்தத் தாழ்வுப் பகுதி உருவானது. தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மற்றொரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது.
அடுத்த 24 மணி நேரத்தில் குஜராத் அருகே உருவான காற்ழுத்த தாழ்வு, வடக்கு- வடமேற்கில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையமாக வலுவடையும்.
மேற்கு வங்கம் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வட மேற்கு நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையமாக வலுவடையும்.
காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan