இஸ்ரேலுக்கு எதிரான எந்தவொரு தற்காப்பு நடவடிக்கையிலும் பிரான்ஸ் பங்கேற்கவில்லை!!
15 ஆனி 2025 ஞாயிறு 23:37 | பார்வைகள் : 3845
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. ஈரான் ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேல் ஈரானின் மேற்குப் பகுதியில் உள்ள ஏவுகணை மற்றும் அணு மையங்களை தாக்கியது.
இத்தாக்குதலில் இரு நாடுகளிலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இஸ்ரேலில் 3 குழந்தைகள் உட்பட்ட, 13 பேர் பலியாகியும் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். ஈரானில் மட்டும் 128 பேர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாகு, "சிவில் மக்களை திட்டமிட்டு கொன்ற ஈரான் கடுமையான விலையை செலுத்த நேரிடும்" என்று கூறியுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், இஸ்ரேலுக்கு எந்தவொரு பாதுகாப்பு நடவடிக்கையிலும் பங்கேற்கவில்லை என்றும், இது தொடர்பாக எங்களிடம் கோரிக்கை வைக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ரஷ்யா நடுவராக இருக்கவேண்டுமென வந்த யோசனையை அவர் மறுத்துள்ளார், ஆனால் அமெரிக்க நடுவராக இருப்பதை ஆதரித்துள்ளார்.
2024 ஏப்ரல் மாதம் ஜோர்டானில் உள்ள தளத்தில் இருந்து, இஸ்ரேலுக்கு எதிரான ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைத் தடுக்க பிரான்ஸ் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால், பாலஸ்தீனத்தில் உள்ள காசா பகுதியில் இஸ்ரேலின் மனிதாபிமானத் தடைமறுக்கும் நடவடிக்கையால், பரிஸ்-டெல் அவிவ் உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan