யாழில் வாள் வெட்டு தாக்குதலில் நால்வர் படுகாயம்
15 ஆனி 2025 ஞாயிறு 16:45 | பார்வைகள் : 2507
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு குழுக்குளுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில், அது மோதலாக மாறி வாள்வெட்டு நடைபெற்றுள்ளது.
இதில் படுகாயமடைந்த நால்வர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களின் விபரம் இதுவரையில் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan