Paristamil Navigation Paristamil advert login

Paris: திருட்டு முயற்சி திடீரென துயரமாக முடிந்தது!

Paris: திருட்டு முயற்சி திடீரென துயரமாக முடிந்தது!

15 ஆனி 2025 ஞாயிறு 17:44 | பார்வைகள் : 9512


பரிஸ் நகரில், சனிக்கிழமை காலை பிகாலில் (Pigalle) ஒரு ஆணை மூன்று இளைஞர்கள் தாக்கி, அவரது பணப்பை, கைபேசி மற்றும் காது கேட்பானை திருடியுள்ளனர். 

உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, குற்றவாளிகளை விரட்டிச்சென்ற காவல்துறையினர், இருவரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். 

மூன்றாவது இளைஞர் ஒரு கட்டிடத்தின் கூரைக்கு ஓடிச் சென்றபோது தவறி விழுந்து, கூரிய இரும்புக் கம்பியில் விழுந்து மிகப்பெரிய வயிற்று காயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரது நிலை கவலைக்கிடமாகவுள்ளது.

திருடர்களால் தாக்கப்பட்ட நபர் லேசான காயங்களுடன் இருந்துள்ளார். கைதான இருவரும் கூட்டாக வன்முறையுடன் திருட்டு செய்த குற்றச்சாட்டில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். விசாரணையை 9ஆம் வட்டார காவல் நிலையம் மேற்கொண்டு வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்