5.2 மில்லியன் யூரோக்கள் பறிமுதல்: Sevranஇல் போலி வர்த்தக வலையமைப்பு சிக்கியது!!
14 ஆனி 2025 சனி 23:46 | பார்வைகள் : 3869
Sevranஇல் ஒரு பெரிய பணமோசடி குழு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.
மே 30 அன்று Bobigny (Seine-Saint-Denis) நகரில், 42 வயதான முகமது கியூ (Mohamed Q) மீது, "பணமோசடி மற்றும் பெரும் நிறுவன சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியதற்காக", 39 முதல் 40 வயதுடைய ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்களும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர் .
முகமது கியூ பல நிறுவனங்களை உருவாக்கி, நம்பிக்கையில்லாத நபர்களை நிர்வாகிகளாக நியமித்து, சட்டவிரோதமாக பணம் சம்பாதித்து வந்துள்ளார். பசுமை எரிசக்தி கம்பனிகளின் பெயரில் தொழில்கள் நடத்தியுள்ளார், ஆனால் இது பணம் திரட்டும் மையமாகவே இயங்கியுள்ளது.
அவரது சொத்துகளும் வாழ்க்கை முறையும் காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. Aulnay-sous-Bois பகுதியில் 500,000 யூரோ மதிப்புள்ள வீடு, மொரோக்கோவில் முதலீடு மற்றும் 1.9 மில்லியன் யூரோக்கள், பல கடைகளில் முதலீடு செய்தமை கண்டறியப்பட்டுள்ளது.
அவரது கார் கேரேஜில் சட்டவிரோதமான கார் வாடகை சேவையை நடத்தியதாக தெரிய வந்துள்ளது. அவர் சொந்தமாக வைத்துள்ள "டாக்ஸிஃபோன்" கடை, முக்கிய அலுவலகமாகவும் பணம் பதுக்குவதற்கான இடமாகவும் பயன்படுத்தப்பட்டதாக காவல் துறையினர் கூறியுள்ளார்கள்.
மொத்தமாக 5.2 மில்லியன் யூரோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டும், சிலர் பயத்தில் மவுனமாக இருந்து வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan