24 மணி நேரத்தில் பிரித்தானிய செல்ல முயன்ற 99 அகதிகள் மீட்பு!!
14 ஆனி 2025 சனி 14:57 | பார்வைகள் : 4929
வெள்ளிக்கிழமை , பிரித்தானிய செல்ல முயன்ற 99 அகதிகள் பல்வேறு மீட்பு நடவடிக்கைகள் மூலம் பிரஞ்சு கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலர் தண்ணீர் புகும் அல்லது கட்டுப்பாடற்ற சிறிய படகுகளில் பயணித்துள்ளனர். சிலர் படகுகளில் ஏறும் போதே சிக்கலில் சிக்கியுள்ளனர். மேலும், ஒரு படகில் இருந்த 63 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட பொழுது, மீதி 16 பேர் ஆரம்பத்தில் மீட்பு நடவடிக்கையை மறுத்துள்ளனர், பின்னர் அவர்கள் வேறு இரு கப்பல்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை மட்டும் 14 படகுகளில் 919 அகதிகள் பிரித்தானிய கால்வாயை கடந்துள்ளனர் என பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை குறைந்தது 15 பேர் இந்த கடல் வழிப்பயணங்களில் உயிரிழந்துள்ளனர்.
2024-ல் 78 பேர் உயிரிழந்தனர், இது சிறிய படகு மூலம் கடலை கடக்கும் முயற்சியை தொடங்கிய காலத்திலிருந்து, அதாவது 2018 முதல் இது மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan