யூதச்சிறுமி பாலியல் வன்கொடுமை - தீர்ப்பளித்த நீதிபதி!
14 ஆனி 2025 சனி 14:55 | பார்வைகள் : 13363
2024 ஜூன் 15 அன்று Courbevoie (Hauts-de-Seine) 12 வயதான யூத மதத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மூன்று சிறுவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், 2025 ஜூன் 13 அன்று நோந்தேர் சிறுவர் நீதிமன்றம் ( tribunal pour enfants de Nanterre) இரு சிறுவர்களுக்கு முறையே 9 மற்றும் 7 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது. அவர்கள் சம்பவத்தின் போது 13 வயதில் இருந்தனர். மூன்றாவது சிறுவர், 12 வயதானவர், சிறைதண்டனைக்கு உட்பட முடியாத காரணத்தால், 5 ஆண்டு கல்வி திருத்த திட்டத்துடன் சிகிச்சை மற்றும் நலவாழ்வு இல்ல தங்குதலுக்கும் ஆணையிடப்பட்டார்.
நடந்தது என்ன?
காவல்துறையினரிடம் சிறுமி அளித்த புகாரில், வீட்டிற்குச் செல்லும் வழியில், தனது வீட்டிற்கு அடுத்துள்ள பூங்காவைக் கடந்து, இரண்டு இளைஞர்களைச் சந்தித்ததாகவும், அவர்களில் ஒருவரைத் தனக்குத் தெரிந்ததாகவும், அவர்கள் தன்னை ஒரு கைவிடப்பட்ட கட்டிடத்திற்குப் பின்தொடரும்படி கட்டாயப்படுத்தியதாகவும் அவர் விளக்கினார். மூன்றாவது பையன் பின்னர் அவர்களுடன் சேர்ந்தான்.
தொடர்ச்சியாக அவளுடைய வாக்கு வாக்குமூலத்தில்,
இளைஞர்களில் ஒருவர் அவளிடம் அவளுடைய யூத மதம் பற்றிக் கேட்டார். அவள் ஏன் தான் யூதர் என்பதை வெளிப்படுத்தவில்லை என்று அவன் அவளிடம் கேட்டான். தாக்கப்படுவதைத் தவிர்க்க தன்னைப் பாதுகாத்துக் கொள்ள விரும்புவதாக அவள் பதிலளித்தாள்.
இந்த இளைஞன் தன்னிடம் இஸ்ரேல் பற்றிப் பேசியதாகவும், தன்னை 'கேலலமான யூதர்' என்று அழைத்ததாகவும், பின்னர் தன்னைத் தாக்கி, தரையில் வீசி, தலைமுடியை இழுத்ததாகவும் விளக்கினார். அவன் தன் மார்பகங்களைத் தொட்டான், லைட்டரால் எரிப்பதாக மிரட்டினான், மேலும் அவள் தலையில் ஒரு போத்தலில் இருந்த தண்ணீரை ஊற்றினான். பின்னர் மூன்று சிறுவர்களில் இருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவர்களில் ஒருவர் சம்பவத்தை ஒளிப்பதிவு செய்ததாகவும் கூறினார்.
இறுதியாக, மூவரில் ஒருவன் அவளைக் கொன்றுவிடுவதாக மிரட்டினான், அதனால் அவள் காவற்துறையிடம் பேசக்கூடாது என்று மிரட்டினான், மறுநாள் அவனுக்கு 200 யூரோக்கள் கொடுக்க உத்தரவிட்டான்.
நீதிபதி தீர்ப்பில், குற்றவாளிகளின் இளம் வயதும் கல்விக் குறைபாடும் இருந்தாலும், அவர்கள் நடத்திய செயல் மிகவும் தீவிரமானதும், சமூகத்துக்கும், அந்த சிறுமிக்கும் ஆபத்தானதுமாக இருப்பதாகக் கூறினார்.
இந்த சம்பவம் மதம்தொடர்பான வன்முறையின் கடுமையை எடுத்துக்காட்டுகிறது என்றும், யூத வெறுப்பயும், சிறுமிகளை குறிவைக்கும் வன்கொடுமைகளையும் எதிர்க்கும் வகையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு கடுமையான எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan