Paristamil Navigation Paristamil advert login

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

14 ஆனி 2025 சனி 14:16 | பார்வைகள் : 1675


கடும் காற்றுடன் கூடிய கால நிலை காரணமாக நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையில் இடம்பெற்று வந்த பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் இன்றைய தினமும்  மற்றும் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களும் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், எதிர்வரும் 16-ம் திகதி வரை தெற்கு தமிழக கடற்கரை, அதனை ஒட்டிய பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கிலோ மீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமான எதிர்வரும் 18ஆம் திகதி வரை கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்