இஸ்ரேல்-ஈரான் மோதல் - பிரான்ஸில் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் – எமனுவேல் மக்ரோன்!
14 ஆனி 2025 சனி 10:52 | பார்வைகள் : 3306
ஈரானின் அச்சுறுத்தலால் பிரான்சில் Sentinelle படைகளின் பாதகாப்பு வலுப்படுத்தப்படும் என எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலையில், இஸ்ரேல், ஈரானில் உள்ள இராணுவ மற்றும் அணு தளங்களை கடுமையாக தாக்கியுள்ளது.
இந்த தாக்குதல்களின் பின்னணியில், பிரான்ஸ் பாதுகாப்பு தேவைகளைத் திரும்ப பரிசீலித்து, உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்த முடிவெடுத்துள்ளது.
'எல்லா சாத்தியமான அச்சுறுத்தல்களுக்கும் எதிராக நாம் தயாராக இருக்க வேண்டும்.' என எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
எமனுவேல் மக்ரோன் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக் குழுவை கூட்டினார். இந்தக் கூட்டத்தின் முடிவில், நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் Sentinelle திட்டம் பலப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
Sentinelle திட்டம் என்றால் என்ன?
Sentinelle என்பது 2015ஆம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட ஒரு உள்நாட்டு ராணுவ பாதுகாப்புத் திட்டமாகும்.
இத் திட்டத்தின் கீழ், பிரான்சில் தாக்குதல் அபாயம் உள்ள பேருந்துகள், தொடருந்துகள், பாடசாலைகள், மத வழிபாட்டுத் தலங்கள், மற்றும் பல முக்கிய பொது இடங்களில் பாதுகாப்பு படைகள் மூலம் பாதுக்காக்கப்படும்.
இந்த நடவடிக்கைகள், இஸ்ரேல்-ஈரான் மோதலின் பின்விளைவுகள் பிரான்ஸ் மீது தாக்கம் ஏற்படுத்தக்கூடும் என்ற முன்னெச்சரிக்கையால் எடுக்கப்பட்டவை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan