Paristamil Navigation Paristamil advert login

அகமதாபாத் விமான விபத்து - இந்திய கிரிக்கெட் வீரர்கள் மௌன அஞ்சலி!

அகமதாபாத் விமான விபத்து - இந்திய கிரிக்கெட் வீரர்கள் மௌன அஞ்சலி!

14 ஆனி 2025 சனி 05:49 | பார்வைகள் : 1899


அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய டெஸ்ட் மற்றும் இந்தியா 'ஏ' கிரிக்கெட் அணிகள் இன்று ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியதுடன், கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடின.

இரண்டு அணிகளுக்கும் இடையே வீரர்களைப் பகிர்ந்து கொண்டு நடைபெறும் பயிற்சிப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இந்த அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேபோல், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணியின் வீரர்களும் மௌன அஞ்சலி செலுத்தினர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த துரதிர்ஷ்டவசமான விமான விபத்தில், விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர்.

விமானம் மோதிய மருத்துவ விடுதியில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பலரும் இந்த விபத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்