”ஈரானோடு இவ் உலகில் வாழ முடியாது!” - மக்ரோன்!!
14 ஆனி 2025 சனி 06:00 | பார்வைகள் : 7040
“ஈரான் அணு ஆயுதம் வைத்திருந்தால், இந்த உலகில் வாழ முடியாது” என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளுடன் எவ்வித இணக்கப்பாடுகளுக்கும் வராமல், தனிச்சையாக அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டு வருவதாக வல்லரசுகள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றது. ஈரானோடு அணுகுண்டு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுமாறும் அமெரிக்கா தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் ஒருபக்கம் இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேற்று ஜூன் 13, வெள்ளிக்கிழமை மாலை தெரிவிக்கையில், “"ஈரான் எந்த சிவிலியன் நியாயமும் இல்லாமல் யுரேனியத்தை செறிவூட்டுவதைத் தொடர்ந்து செய்து வருகிறது. ஐரோப்பாவுக்கான ஸ்திரத்தன்மைக்கு ஈரான் வழி வகுக்கிறது. அணுகுண்டு வைத்திருக்கும் ஈரானோடு இவ்வுலகில் வாழ முடியாது” என தெரிவித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan