Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் மற்றும் புறநகரங்களில் இடி மின்னல் தாக்குதல்கள்.. விமான சேவைகள் இரத்து!!

பரிஸ் மற்றும் புறநகரங்களில் இடி மின்னல் தாக்குதல்கள்.. விமான சேவைகள் இரத்து!!

13 ஆனி 2025 வெள்ளி 21:00 | பார்வைகள் : 5489


 

இன்று ஜுன் 13, வெள்ளிக்கிழமை மாலை முதல் பரிஸ் மற்றும் இல் து பிரான்ஸ் மாவட்டங்களில் இடி மின்னல் தாக்குதல்கள் பதிவாகி வருகிறது. 110 கி.மி வேகம் வரையான புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அதை அடுத்து, ஓர்லி (Orly) நிலையத்தின் விமான சேவைகள் 20% சதவீதத்தால் சேவைகளைக் குறைத்துள்ளது. இடி மின்னல் தாக்குதல்கள், மழை மற்றும் புயல் காரணமாக மொத்தமாக 29 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு மாவட்டங்களிலும் தென்மேற்கு மாவட்டங்களிலும் இந்த அனத்தம் ஏற்பட உள்ளது.

100 தொடக்கம் 120 கி.மீ வேகம் வரை புயல் காற்று பதிவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 2 தொடக்கம் 3 மணிநேரங்களுக்குள் 50 மி.மீ மழை பதிவாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
***

செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்!

தென் மேற்கில்.. : Ariège, Dordogne, Haute-Garonne, Gers, Gironde, Landes, Lot-et-Garonne, Pyrénées-Atlantiques, Tarn-et-Garonne and Hautes-Pyrénées

வடக்கில் : Normandy மொத்த மாகாணமும், Eure-et-Loir, Mayenne, Oise, Nord, Pas-de-Calais, Sarthe, Somme, Yvelines, Val d'Oise, Paris மற்றும் புறநகர்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்